மாணவன் பலி

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புது வடவள்ளி, 2-வது வீதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி பார்கவி. இவர்களது மகன் கிரன்குமார் (13). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கிரண்குமார் வீட்டில் இருந்து வந்தார். நேற்று மதியம் கிரன் குமார் அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் அவரது நண்பர் கார்த்திஸ் உடன் குளித்துக் கொண்டிருந்தார். கிணற்றுக்குள் நீர் மூழ்கி மோட்டாரை இறக்கி அதன் கயிற்றினை படிமரத்தில் உள்ள கட்டையில் கட்டி இருந்தனர். அப்போது படிமரம் திடீரென உடைந்து கீழே குளித்து கொண்டிருந்த கிரன்குமார் தலையில் எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கிரான்குமார் நீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் கார்த்திஸ் வெளியே வந்து தோட்டத்தில் இருந்த கிரன்குமாரின் அம்மா பார்க்கவிடம் நடந்த சம்பவத்தை கூறினார். பின்னர் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றிலிருந்து கிரண் குமார் உடலை மீட்டனர். சத்தியமங்கலம் போலீசார் கிரன் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிரன்குமார் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story

