லாரி உரிமையாளர்கள் சங்க நிதி மோசடியில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை
Ariyalur King 24x7 |31 Dec 2024 10:05 AM GMT
வி கைகாட்டியில் செயல்பட்டு வரும் லாரி உரிமையாளர்கள் சங்கத் நிதி மோசடியில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர்
அரியலூர், டிச.31- வி.கைகாட்டி செயல்பட்டு வரும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், நிதி மோசடியில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், வி.கைகாட்டி த.செல்வம் திங்கள்கிழமை மனு அளித்தார். அவர் அளித்த மனுவில், வி.கைகாட்டியில் செயல்பட்டு வரும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 4 ஆண்டுகளாக கூட்டம் நடத்தாமலும், தேர்தல் நடத்தாமலும் தலைவர் பழனியாண்டி தனிச்சையாக செயல்பட்டு, பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். மேலும் சங்க நிதிகள் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடக்கப்பட்ட வழக்கில், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அரியலூர் மாவட்ட பதிவாளருக்கு கடந்த 18.11.2024 அன்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் பழனியாண்டி, பதிவாளர் அழைப்பாணை பெற்றும் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்து நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story