கோவில் முன் பொதுக்கூட்டம் குன்றத்துாரில் பக்தர்கள் அவதி
Kanchipuram King 24x7 |31 Dec 2024 10:33 AM GMT
குன்றத்தூரில் கோவில் முன் திமுக சார்பில் பொதுக் கூட்டத்தால் பக்தர்கள் அவதி
சென்னை அடுக்க குன்றத்துாரில், 12ம் நுாற்றாண்டில் சேக்கிழாரால் கட்டப்பட்ட பழமையான திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.நவ கிரகங்களில் இக்கோவில் ராகு தலமாக விளங்குகிறது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்நிலையில், இந்த கோவிலின் முன் மேடை அமைத்து, அரசியல் கட்சிகளின் கூட்டம் அடிக்கடி நடத்தப்படுகிறது. கூட்டம் நடத்தப்படும் நாள் முழுக்க, ஒலிபெருக்கியில் கட்சி பாடல்கள் இசைக்கப்படுகின்றன. கூட்டத்திற்கு வருவோரின் வாகனங்கள் கோவிலை சுற்றி நிறுத்தப்படுகின்றன.மேலும், கோவிலின் பிரதான சாலையான பெரிய தெருவில் இருக்கைகள் போடப்பட்டு, 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் அமர்வதற்கு ஏற்படு செய்யப்படுகிறது. கட்சியினர் மைக்கில் பேசும் சத்தம், கோவிலின் உள்ளேயும் அதிகம் கேட்கிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், சனி பிரதோஷம் தினமான நேற்று முன்தினம், இக்கோவிலின் முன் மேடை அமைத்து, தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வேதனைக்குள்ளாகினர். கோவிலின் முன் பொதுக்கூட்டம் நடத்த, காவல் துறை அனுமதி அளிக்கக் கூடாது. இதற்கு மாற்றாக, பேருந்து நிலையம் பகுதியில் கூட்டம் நடத்தலாம் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story