கல்லாத்தூர் முதல் மீன்சுருட்டி வரை சாலையை தரம் உயர்த்தி தார் சாலை அமைக்க சாலை மறியலுக்கு ஆதரவைத் திரட்டி சாலை சீரமைப்பு குழு தலைவர் துண்டு பிரசுரம் விநியோகம்

கல்லாத்தூர் முதல் மீன்சுருட்டி வரை சாலையை தரம் உயர்த்தி தார் சாலை அமைக்க சாலை மறியலுக்கு ஆதரவைத் திரட்டி சாலை சீரமைப்பு குழு தலைவர் துண்டு பிரசுரம் விநியோகம்
கல்லாத்தூர் முதல் மீன்சுருட்டி வரை சாலையை தரம் உயர்த்தி தார் சாலை அமைக்க சாலை மறியலுக்கு ஆதரவைத் திரட்டி சாலை சீரமைப்பு குழு தலைவர் கு பாலசுப்பிரமணியன் பொதுமக்களோடு இணைந்து துண்டு பிரசுரம் வழங்கினார்.
அரியலூர், டிச.31- கல்லாத்தூர் முதல் மீன்சுருட்டி வரை உள்ள சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து  சாலை பணிகளை தொடங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திற்காக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி போராட்டத்திற்கு ஆதரவு கூறினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  கல்லாத்தூர். மீன்சுருட்டி சாலையை அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பல தரப்பட்ட பொதுமக்கள் மீன்சுருட்டிக்கு அத்தியாவசிய பொருட்கள் வேளாண் இடுப்பொருட்கள் வாங்குவதற்கும் மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லவும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்  மேலும் இந்த பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கும், உரம் போன்ற பொருட்களை வாங்கி வருவதற்கும்  இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள் இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த கல்லாத்தூர் - மீன்சுருட்டி சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது  கல்லாத்தூர் மீன் சுருட்டி சாலையின் நடுவிலே உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக இருக்கும் ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சிற்பமும் அமைந்துள்ளது  இவ்வாறு பலதரப்பட்ட முறையில் மிக முக்கியமாக உள்ள இச்சாலையை செப்பனிட வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை  எனவே இச்சாலையை செப்பனிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் போராட்ட குழு சார்பாக துண்டு பிரசுரம்  வழங்கப்பட்டன.இதுகுறித்து போராட்ட குழு தலைவர் பாலசுப்ரமணியம் கூறும் போது  இச்சாலையே  செப்பனிட வலியுறுத்தி தமிழக முதல்வர், முதன்மை செயலாளர் ஆகியோருக்குகோரிக்கை மனு அனுப்பியும் இந்த சாலை பணிகள் துவங்கப்படவே இல்லை இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த பகுதியில் வசிக்கக்கூடிய கல்லாத்தூர் -மீன்சுருட்டி சாலை பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்களின் சார்பாக அந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி  வருகிற 08ம் தேதி சுமார் 10, 15 கிராமங்களில் உள்ள பொது மக்களை திரட்டி மீன்சுருட்டி கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை தமிழ்நாடு அரசு தவிர்க்கும் வகையில் இந்த சாலையை  மாநில நெடுஞ்சாலையாக  அறிவித்து உடனடியாக பணிகளை துவங்கி இந்த சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என தமிழக முதல்வரை சாலை சீரமைப்பு குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
Next Story