இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
X
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பர் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(52). இவர் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் உள்ள திரையரங்கு முன் நிறுத்தி இருந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மாயாண்டி(52) காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் அதில் கோட்டையூரை சேர்ந்த ராஜா(35) மற்றும் பள்ளத்துறை சேர்ந்த பாண்டி ஆகியோர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது அதனை தொடர்ந்து நேற்று(டிச.30) இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story