விருதுநகரில்உரியமுறையில் நடைபெறாத ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி..*

விருதுநகரில்உரியமுறையில் நடைபெறாத ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி..*
விருதுநகரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை சரிவர செய்யவில்லையென வழக்குறிஞர் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் போக்குவரத்து அதிமுள்ள மிக முக்கிய பகுதியாக இருப்பது பாத்திமாநகர் ஆத்துப்பாலம். இங்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பாலசுப்பிரமணியன் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நீதிமன்றம் அவ்வாறு ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை உடனே அகற்ற வேண்டுமென சர்வே எண்ணுடன் நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து,நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மதிவாணன் தலைமையில் கிழக்கு காவல் ஆய்வாளர், நகர நில அளவையாளர் மணிராஜ் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நெடுஞ்சாலைத்துறையினர் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கடைகளின் படிக்கட்டுகள், தற்காலிக பந்தல்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால், பாலத்தின் அருகே அமைக்கப்பட்ட தகர செட் மற்றும் கட்டிடம் ஒன்றை அகற்றவில்லை. அப்போது, அங்கிருந்த வழக்கறிஞர் உள்ளிட்ட சிலர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவில்லையென நெடுஞ்சாலைத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, தகர செட் மற்றும் கட்டிடம் உள்ள இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது, உயர்நீதிமன்றத்தால் அப்பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென வாதிட்டனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறையினரிடம் எல்கை வரைபடம் குறித்த எவ்வித ஆவணமும் இல்லை. இதன் காரணமாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி ஆக்கரமிப்புகள் சரியாக அகற்றப்படாத நிலை ஏற்பட்டது.
Next Story