பரமத்தி அருகே கள்ளக்காதலனை கொலை செய்த காதலி கைது.

பரமத்தி அருகே கள்ளக்காதலனை கொலை செய்த காதலி கைது.
X
பரமத்தி அருகே கள்ளக்காதலனை கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்,டிச.31: நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள பெருமாபாளையத்தை சேர்ந்த ஸ்ரீரங்கன் மனைவி வளர்மதி (50). சீரங்கன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் வளர்மதி தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் மோகனூர் அருகே உள்ள பரளியைச் சேர்ந்த சுப்பு மகன் துரைசாமி(47) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. துரைசாமி அடிக்கடி மது அருந்திவிட்டு வளர் மதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துரைசாமி மது போதையில் வளர்மதியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது வளர்மதி அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி சம்பவ இடத்திற்கு சென்று துரைசாமியின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் போலீசார் வளர்மதியை கைது செய்து விசாரணை செய்தபோது வளர்மதி பெயரில் துரைசாமி சொந்தமாக வீடு கட்டி கொடுத்துள்ளார் அந்த வீட்டை எனது பெயருக்கு எழுதி தரகூறி துரைசாமி நேற்று முன் தினம் இரவு வளர்மதி இடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதில் ஆத்திர மடைந்த வளர்மதி அருகில் இருந்த கட்டையை எடுத்து துரைசாமி தலையில் பலமாக தாக்கியுள்ளார் இதனால் துரைசாமி சம்பவ இடத்தில் இறந்துவிட்டார் என்று வளர்மதி வாக்குமூலம் அளித்தார். இதன் பின்னர் வளர்மதியை பரமத்தி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story