பரமத்திவேலூர் தாலுகாவில் மரவள்ளி கிழங்கு விலை சரிவு விவசாயிகள் கவலை.

X
Paramathi Velur King 24x7 |31 Dec 2024 6:36 PM ISTபரமத்திவேலூர் தாலுகாவில் மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ.700 சரிவுவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர், டிச.31: பரமத்திவேலூர் தாலுகாவில் மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ.700 வரை சரிந்துள்ளதால் விவ சாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான எஸ். வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, ஜேடர்பாளையம், சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிசென்று புதன் சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ்தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில், வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை அதன்படி கடந்த வாரம் மர வள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ.700 வரை சரிந்து ரூ.6 ஆயிரத்திற்கு 800-க்கு விற்பனை யாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.7 ஆயிரத்து 500-க்கு விற் பனையானது. தற்போது விலை எதுவும் மாறாமல் அதேவிலைக்கு விற்பனையாகிறது.மேலும் மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதன்காரணமாக மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
