கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பகுதிகளில் பொங்கல் பானை தயாரிப்பு தீவீரம்.
Krishnagiri King 24x7 |31 Dec 2024 10:51 PM GMT
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பகுதிகளில் பொங்கல் பானை தயாரிப்பு தீவீரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் மண்பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மங்கலபட்டி, சென்ராயம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மண்பானை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பானைகளை தயாரிக்க நல்ல தரமான மண்ணை கொண்டு பசை போன்று பதப்படுத்தி, அதை சுழலும் சக்கரத்தின் மூலம் பானையாக உருவாக்கி, அதன் பிறகு கீழ்பகுதியை கைகளால் இணைத்து பானைக்கு முழு உருவம் கொடுக்கப்படுகிறது. அந்த பானை நன்றாக காய்ந்த பிறகு சோலையில் வைத்து வேகவைத்து. அதற்கு வண்ணம் பூசி விற்பனைக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்கள், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் அவ்வபோது பெய்து வரும் தொடடர் மழையால் பானை செய்ய முடியாமல் தெழிலாளர்கள் அவதிபட்டு வருகின்றனர். தற்போது கடந்த இரண்டு நாட்களாக வெயில் தலைக்காட்டி வருவதால் பானைகளை வெயிலில் காயவைத்து வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பானைகளை வழங்கி வருகின்றனர்.
Next Story