வழி தவறிய மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு
Nagercoil King 24x7 |1 Jan 2025 2:52 AM GMT
குளச்சல்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கூத்தா விளையில் நேற்று சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிந்தார். எங்கு செல்வதென தெரியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். இதை கவனித்து அப்பகுதி பொதுமக்கள் மூதாட்டியிடம் விசாரித்தனர். அவருக்கு காது கேட்காததால் ஊர் பெயரை சொல்ல தெரியவில்லை. கையில் ஜோசப் என பச்சை குத்தி இருந்தார். சத்தமாக கேட்கும்போது பெயர் ஏஞ்சலின் என பதில் கூறினார். சில நேரங்களில் திங்கள் நகர் அருகே மாங்குழி என கூறினார். பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள தெரிந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் மூதாட்டி குறித்த விவரம் கிடைக்கவில்லை. இதை எடுத்து அவரை குளச்சல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது ஊர் பெயர் சொல்ல தெரியவில்லை. இதை அடுத்து மூதாட்டியை சுவாமியார் மடத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story