அலுவலகத்தில் அதிகாரி போல் நடித்தவர் கைது
Nagercoil King 24x7 |1 Jan 2025 3:16 AM GMT
நாகர்கோவில்
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தோவாளை பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தை பதிவு செய்ய வேண்டும் என கூறி ஒருவர் வந்துள்ளார். அப்போது அலுவலக அதிகாரி சசி என்பவரிடம் தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்லையில் வேலை பார்ப்பதாக கூறி கூறியுள்ளார். வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர் முன்னுக்கும் பின் முரணாக கூறவே, நெல்லையில் விசாரித்ததில் அவர் லஞ்ச ஒழிப்பு அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. உடனே இது குறித்து அலுவலர் சசி ஆரல்வாய் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த சுஜிவன் (54) என்பதும், இவர் தற்போது மனவளக்குறிச்சியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் சுஜீவன் பழைய வாகனத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அந்த வகையில் தனது வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நாடியதாகவும், அதில் பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்பட்டதால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி என சுஜீவன் கூறியுள்ளதாகவும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story