அரகண்டநல்லுார் கமிட்டி நாளை முதல் இயங்கும்
Villuppuram King 24x7 |1 Jan 2025 4:25 AM GMT
கமிட்டி நாளை முதல் இயங்கும்
விழுப்புரம் மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலர் சந்துரு செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த டிச.1ம் தேதி பெய்த கன மழையால், விழுப்புரம் விற்பனை குழு கட்டுப்பாட்டில் உள்ள விக்கிரவாண்டி, அரகண்டநல்லுார் வேளாண் விற் பனை கூடங்களில் இருந்த சுற்றுசுவர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால், அங்கிருந்த விளைபொருள்கள் மற்றும் கிடங்குகளை வெள்ள நீர் சூழ்ந்தது.இதனால், டிச.2ம் தேதி முதல் பராமரிப்பு காரணமாக இந்த விற்பனை கூடங்கள் செயல்படாமல் இருந்தது.இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அறிவுரைப்படி, பருவ கால விளை பொருள்கள் வரத்து துவங்க உள்ள நிலை யில், விவசாயிகள் நலன் கருதி விற்பனை கூடங்கள், விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.தற்காலிக பராமரிப்பு பணிகள் முடிந்து, அரகண்ட நல்லுார் விற்பனை கூடம், நாளை (2ம் தேதி) முதலும், விக்கிரவாண்டி விற்பனை கூடம் 3ம் தேதி முதல் வழக்கம் போல் செயல்பட உள்ளதால், விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை கொண்டுவந்து பயன்பெறுமாறும், வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது என்று, அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
Next Story