வெளிப்பாளையம் சத்ரு சம்ஹார மூர்த்தி கோவிலில்
Nagapattinam King 24x7 |1 Jan 2025 4:25 AM GMT
புத்தாண்டை முன்னிட்டு 5.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
நாகை வெளிப்பாளையத்தில் உள்ள, சத்ரு சம்ஹார மூர்த்தி சாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சத்ரு சம்ஹார மூர்த்திக்கு, ரூ.10. 20, 50, 100, 200, 500 மற்றும் சிங்கப்பூர் வெள்ளி ஆகிய ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..
Next Story