புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா
Chengalpattu King 24x7 |1 Jan 2025 4:26 AM GMT
புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா
செங்கல்பட்டு மாவட்டத்தில், 144 கல்லூரிகளைச் சோ்ந்த 10,383 மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்திலும், 126 கல்லூரிகளைச் சோ்ந்த 9,228 மாணவா்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும், 88 கல்லூரிகளைச் சோ்ந்த 654 மாணவிகள் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க திட்டத்திலும் என மொத்தம் செங்கல்பட்டு 20,265 மாணவ, மாணவிகள் இந்தக் கல்வி ஆண்டில் பயன்பெறுகின்றனா். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற 350 மாணவிகள் பயன்பெறும் வகையில் பற்று அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் உதயா கருணாகரன், மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா, செங்கல்பட்டு வட்டாட்சியா் பூங்குழலி மற்றும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
Next Story