வளவனுார் பேரூராட்சியில் அரசு கட்டடங்கள் திறப்பு
Villuppuram King 24x7 |1 Jan 2025 4:33 AM GMT
பேரூராட்சியில் அரசு கட்டடங்கள் திறப்பு
விழுப்புரம் அருகே வளவனுார் பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் அம்பேத்கர் தெருவில் ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டள்ளது. அதே போல், சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, நரையூர் பாதையில் ரூ.24.50 லட்சத்தில் கிளை நுாலகம் கட்டிய கட்டடங்களுக்கான திறப்பு விழா நடந்தது.பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார். லட்சுமணன் எம்.எல்.ஏ., அரசு கட்டடங்கள், பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள், சசிகலா கபேரியல், மகாலட்சமி செந்தில், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமாமகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திரிசங்கு உட்பட தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story