சேலம் தாதகாப்பட்டியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
Salem King 24x7 |1 Jan 2025 5:23 AM GMT
போலீசார் விசாரணை
சேலம் தாதகாப்பட்டி திருஞானம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை செய்து வந்த நிறுவனத்தில் இவர் உள்பட சிலரை வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் நடைபெற இருந்த சூழ்நிலையில் தனக்கு வேலை போய்விட்டதே என்று அவர்மன உளைச்சல், விரக்தியில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story