தக்காளி விலை குறைந்தது

தக்காளி விலை குறைந்தது
X
வரத்து அதிகரிப்பு எதிரொலியாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை
ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, பதனப்பள்ளி, கர்நாடகா மைசூர் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவில் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த வாரம் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்துக் குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் 40 வரை விற்பனையானது. இந்நிலையில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து வரத்தும் அதிகரித்த காரணமாக தக்காளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று வ உ சி மார்க்கெட்டிற்கு ஆந்திரா மதனப்பள்ளி மைசூர் கர்நாடகா தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் காரணமாக தக்காளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்று 14 கிலோ கொண்ட சின்ன தக்காளி பெட்டிகள் ரூ. 100 முதல் 150 -க்கு விற்பனையானது. 26 கிலோ கொண்ட பெரிய தக்காளி பெட்டிகள் ரூ. 200 முதல் 250 வரை விற்பனையானது. சில்லறை விற்பனையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ 18 முதல் 20 வரை விற்பனையானது. தக்காளி விலை பாதியாக குறைந்ததால் இன்று சிறிய வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு கிலோ கணக்கில் தக்காளிகளை வாங்கிச் சென்றனர்.
Next Story