அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
X
ஒருமையில் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க விட்டால் ஜனவரி 2-ம் தேதி முதல் தணிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் அனைத்து பணியாளர் சங்கத்தினர் தகவல்
ஈரோடு கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பதிவறை எழுத்தர் மீது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை சார்பாக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு கடந்த 18ஆம் தேதி கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் சென்றனர். அப்போது புகாருக்குள்ளானவரை பாதுகாக்கும் நோக்கில் தங்களை மரியாதை குறைவாக ஒருமையில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் பேசினார் என்று நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.அவர் மீது நடவடிக்கை கோரி சென்னை தலைமை தணிக்கை இயக்குனர் கூட்டுறவு தணிக்கை இயக்குனருக்கு புகார் அனுப்பினர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்தும், முருகன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஈரோடு கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக பணியாளர்கள் பணியை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை கோரிக்கையை வலியுறுத்தினர். கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற ஜனவரி 2ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் சங்க பணியாளர்கள் தணிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். பணி புறக்கணிப்பில் அலுவலகப் பணியாளர் மற்றும் நியாய விலை கடை ஊழியர்கள், திருப்பூர், கோவை, சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் என 760 பேர் கலந்து கொண்டனர். .
Next Story