மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி

X
சிவகங்கை மாவட்டம், மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி வருகின்ற 05.01.2025 அன்று நடைபெறவுள்ளது ஆர்வமுள்ள நபர்கள் பங்கேற்று பயன்பெறலாம் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி வருகின்ற 05.01.2025 அன்று காலை 06.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் மாணவர்களுக்கு 8 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 5 கி.மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் மாணவர்களுக்கு 10 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 5 கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டப்போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும். 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழினை தனித்தனியாக பெற்று வரவேண்டும். ஆதார் கார்டு / பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ்/ஆதார் கார்டு நகல் கொண்டு வரவேண்டும். இப்போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முதல்பரிசாக ரூ.5000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2000/-மும், 4 முதல் 10ம் வரை இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000/-மும் பரிசுத்தொகையினை அவர்களது வங்கி கணக்கின் வாயிலாக மட்டுமே வழங்கப்படும். எனவே, ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகலினையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். மேலும், ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் 05.01.2025 அன்று காலை 6.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வாயில் முன்பு வருகை தர வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703503 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story

