சாலையில் ரீல்ஸ் எடுத்த தொழிலாளி உயிரிழப்பு
Nagercoil King 24x7 |1 Jan 2025 10:39 AM GMT
கன்னியாகுமரி
திருச்சியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (53). கட்டிடத் தொழிலாளி. தற்போது கன்னியாகுமரியில் குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இன்று 1-ம் தேதி காலை 7:30 மணிக்கு கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் நடந்து சென்றார். அப்போது சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் உள்ளதை வீடியோ எடுத்து தாருங்கள் என பாலசுப்பிரமணியிடம் கூறியுள்ளனர். உடனே அவர் செல்போனை வாங்கி வீடியோ எடுத்துள்ளார். சாலையின் ஓரம் நின்று வீடியோ எடுத்த அவர் சாலைக்கு வந்து விட்டார். அந்த நேரத்தில் வந்த கார் பாலசுப்ரமணியன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி, அவரது உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர்.
Next Story