புத்தாண்டில் முதல் சூரிய உதயத்தை காண குவிந்த மக்கள்
Nagercoil King 24x7 |1 Jan 2025 10:51 AM GMT
கன்னியாகுமரி
ஆங்கில வருடமான 2025 ஆம் ஆண்டு இன்று மலர்ந்தது. இந்த புத்தாண்டை ஒட்டி சுற்றுலாத்தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலமாக நடந்தது. கன்னியாகுமரியில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது . ஆனால் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை ஒட்டி நட்சத்திர ஓட்டலில் கொண்டாட்டம் நடைபெறவில்லை. இதனால் ஹோட்டல்கள் தங்கியிருந்த வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை புத்தாண்டு முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகு கடற்கரையில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது மேகமூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகு கடலில் சூரியன் உதயம் மாநகராட்சி தெளிவாக தெரியவில்லை. சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர்.
Next Story