குமரி : வேர்களை தேடி கலை பயணம்
Nagercoil King 24x7 |1 Jan 2025 11:38 AM GMT
கன்னியாகுமரி
வேர்களைத்தேடி பண்பாட்டு கலை பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்த புலம்பெயர் தமிழர்களுடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, ஆகியோர் கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் இன்று (01.01.2025) கலந்துரையாடினர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் இளம் மாணவர்கள், தாய்த்தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், மூன்றாம் கட்ட பயணமாக உகான்டா, நார்வே, தென் ஆப்ரிக்கா , மொரிசியஸ், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, மியான்மர் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த 38 அயலகத்தமிழ் மாணவ மாணவியர்களுடன் 29.12.2024 அன்று தொடங்கப்பட்டு 12.01.2025 அன்று வரை நடைபெறும். தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடுஅரசு சார்பில் இவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். தொடர்ந்து புலம்பெயர் தமிழக மாணவ மாணவியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில்; கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
Next Story