திருச்சியில் முதியவர், மாயம்
Tiruchirappalli King 24x7 |1 Jan 2025 2:44 PM GMT
கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்ற முதியவர் மாயம்
திருச்சி பீமநகர் குழந்தை இயேசு மருத்துவமனை பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது80) இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 63. ) இவர் பீமநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கேன்டீன் நடத்தி வருகிறார் . இவரது கணவர் தங்கராஜ் திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து லட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story