வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்த பொதுமக்கள்
Chengalpattu King 24x7 |1 Jan 2025 2:50 PM GMT
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்த பொதுமக்கள்
ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை முன்னிட்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு இலங்கை, பாகிஸ்தான் ,பர்மா , இந்தோனேஷியா சைபிரியா கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் இந்த சரணாலயம் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் களை கட்டி இருக்கும் இந்த நிலையில் இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்பொழுது 30000 திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் உள்ள நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை என்பதால் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு பாண்டிச்சேரி விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இயற்கைகளுடன் கூடிய பறவைகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளில் வரத்து அதிகரிப்பதால் பார்வையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வனத்துறையினர் சிறப்பாக செய்துள்ளனர்.
Next Story