செய்யூர் அருகே புது மாப்பிள்ளை மாயம் மனைவி புகார்
Chengalpattu King 24x7 |1 Jan 2025 2:57 PM GMT
செய்யூர் அருகே புது மாப்பிள்ளை மாயம் மனைவி புகார்
செய்யூர் அடுத்த பாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் தினேஷ், 22. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரது மகள் ஜோதிகா,24, என்பவரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.பின், கடந்த 24ம் தேதி, திருமணம் செய்துள்ளனர்.இந்நிலையில், செய்யூர் பகுதியிலுள்ள நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற தினேஷ், குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். வெளியில் சென்ற கணவர் மீண்டும் வீடு திரும்பாததால், திருமணம் செய்து ஏமாற்றி விட்டு தலைமறைவான கணவரை கண்டுபிடித்து, தன்னுடன் சேர்த்து வைக்குமாறு, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஜோதிகா நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின்படி வழக்கு பதிவு செய்த மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
Next Story