மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து காட்சியளித்த நம்பெருமாள்

வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து மூன்றாம் திருநாளான இன்று திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து மூன்றாம் திருநாளான இன்று நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் - மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து: கலிங்கத்துராய்; கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6 வட முத்து சரம் பின்புறம் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி,திருக் கைகளில் தாயத்து சரம் , ரத்தின திருவடி அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார
Next Story