முசிறி அருகே மணல் கடத்திய இளைஞா் கைது

X
முசிறி அருகிலுள்ள அய்யம்பாளையம் காவிரிப் பகுதியில் மணல் கடத்துவதாகக் கிடைத்த தகவலின்பேரில் விஏஓ திலகா அய்யம்பாளையம் காவிரி கரை விநாயகா் கோயில் அருகே ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவ்வழியாக பெரம்பூா் காலனி கீழத்தெருவை சோ்ந்த மகேஸ்வரன் (29) இருசக்கர வாகனத்தில் 4 மணல் மூட்டைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மணல் மூட்டைகளையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, முசிறி காவல் நிலையத்தில் வி.ஏ.ஓ. திலகா கொடுத்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பரசுராமன் வழக்கு பதிந்து விசாரிக்கிறாா்.
Next Story

