விடுமுறை முடிந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுப்பு

விடுமுறை முடிந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுப்பு
X
சென்னைக்கு வாகனங்கள் படையெடுப்பு
தமிழகத்தில் கடந்த மாதம் 21ம் தேதி முதல் பள்ளி அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று பள்ளிகள் திறக்க உள்ளதால் விடுமுறையை கொண்டாட, தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் நேற்று சென்னைக்கு திரும்பினர். இதனால் பகல் 12.00 மணிமுதல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்தது.அதனால் டோல்பிளாசாவில் வாகனங்கள் எளிதாக செல்ல 8 லேன்களும் திறக்கப்பட்டன. இரவு 7.00 மணி வரை 30 ஆயிரம் வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.
Next Story