ஆம்பூர் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி உயிரிழப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ருக்கு என்ற மூதாட்டி இன்று அதே பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அச்சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இவ்விபத்து குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Next Story

