ராமநாதபுரம் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

ராமநாதபுரம் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
X
தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் நியமிக்க கோரியும், தரம் உயர்த்த கோரியும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.
ராமநாதபுரம் தொண்டி மேம்படுத்தப்ட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி நடக்கும் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பகுதி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது இதனால் உயிர் பலியும் ஏற்படுகிறது. அதனால் போதிய டாக்டர்கள் நியமிக்க கோரியும், ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக நிறுவனங்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஹைதர் அலி, தமிழகமக்கள் ஜனநாயக கட்சி தலைவர் செரீப், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், தொண்டி மக்கள் நலப்பணிக்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story