நாட்றம்பள்ளி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள 10அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!ஓட்டுனர் தப்பி ஓட்டம்! பெங்களூர் மாவட்டம் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் இவர் 20 லாரிகள் வைத்து பார்சல் பைக் நைட் என்ற பெயரில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கார்த்திக் என்ற லாரி டிரைவர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பார்சல்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கல்லு குட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பட்டையிழந்து அருகே உள்ள 10 அடி ஆழத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் லாரியை அங்கே விட்டு ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் விரைந்து வந்து கவிழ்ந்த லாரியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

