அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ் வரி செந்தில்நாதன் தலைமையில் தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

X
ஆங்கில புத்தாண்டில் தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய பேரூராட்சி தலைவர் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ் வரி செந்தில்நாதன் தலைமையில் தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் நேற்று அலுவலகம் வளாகத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுடன் ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினார். முன்னதாக அலுவலக வளாகத்தில் கேக் வெட்டப் பட்டு தூய்மை பணியாளர்களுக்கு வழங்கி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர்கள் வேலுச்சாமி, ராதா மாதேஸ்வரன், சிந்து சுரேஷ், சங்கீதா கந்தசாமி மற்றும் தூய்மை பணியாளர் கள் கலந்து கொண்டனர்.
Next Story

