ராமநாதபுரம் விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

ராமநாதபுரம் விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு
X
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முற்றுகைப் போராட்டம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தப்படும் என அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முற்றுகைப் போராட்டம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தப்படும் என அறிவிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, கடலாடி, கமுதி,முதுகுளத்தூர் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழை மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000/- நிவாரணத்தொகை வழங்கிடுக. அதி கனமழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு 100 % தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்கிடுக. தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25,000/- மற்றும் இழப்பீடாக ரூ.50,000/- காப்பீட்டுத் தொகை வழங்கிடுக. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்திடுக. முதுகுளத்தூர் பகுதியில் கடந்த 2023-24ம் ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழிவுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிவாரணம் வழங்கிடுக வேண்டும் என்று தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் வருத்தப்படும் என அறிவித்துள்ளனர்
Next Story