இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
X
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் முத்துராமலிங்க தேவா் 62-ஆவது குருபூஜை விழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் திண்டுக்கல்- காரைக்குடி தேசியநெடுஞ் சாலையில் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 14 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 25 ஜோடிகள் என 39 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் மதுரை அவனியாபுரம் எஸ்.கே.ஆா். முதல் பரிசையும், மட்டங்கிப்பட்டி காவியாகதிா்வேல் 2- ஆவது பரிசையும், காரைக்குடி எம்.சி.சிவா, தாழையூா் முத்துலிங்கம் கண்ணையா ஆகியோா் 3 -ஆவது பரிசையும், அதிகரை வேங்கை சோ்வை வேப்பங்குளம் நல்லம்மாள் 4- ஆவது பரிசையும் பெற்றனா். சின்னமாடு பிரிவில் மதுரை அவனியாபுரம் எஸ்.கே.ஆா்.மோகன்குமாா் முதல் பரிசையும், காளாப்பூா் இதயா, கே.எம்.பட்டி ஹா்சித் 2- ஆம் பரிசையும், காளாப்பூா் ராஜாங்கம் 3-ஆம் பரிசையும், எஸ்.எஸ்.கோட்டை சுப்பு 4 -ஆம் பரிசையும் பெற்றனா். வெற்றி பெற்ற முதல் 4 மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கபட்டன. சாலையில் சீறிப்பாய்ந்த காளைகளை இருபுறமும் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Next Story