ராமநாதபுரம் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

ராமநாதபுரம் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
X
உத்திரகோசமங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து25 பேர் படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா திரு உத்திர கோசமங்கை அருகே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்கள் செல்வதற்காக காலை 7 மணிக்கு அரசு நகர் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் ஆலங்குளம் சென்ற நகர் அரசு பேருந்து பள்ளி மாணவர்கள் பொது மக்களை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரம் நோக்கி வந்த போது ஆலங்குளம் விலக்கு பகுதியில் திருஉத்த ரகோசமங்கையிலிருந்து முதுகுளத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது பிரேக் பிடிக்காமல் பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள், கட்டிட தொழிலாளர்கள், பொது மக்கள் என 25 பேர் படுகா யமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருஉத்திரகோசமங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story