ஊராட்சியை பேரூராட்சி உடன் இணைப்பதற்கு எதற்கு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
ஆரணி பேரூராட்சியில் மல்லியன் குப்பம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரணி புதுவாயல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி அருகே உள்ள மல்லியன் குப்பம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் காய்கறி, மலர் போன்றவை பயிரிடப்பட்டு சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. சோழவரம் ஒன்றியத்தில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க தமிழக அரசாணை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லியன் குப்பம் கிராம மக்கள் பேரணியாக சென்று புதுவாயல்- ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராம ஊராட்சியை பேரூராட்சியு டன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என புகார் தெரிவித்தனர். மேலும் சிறு குறு விவசாயிகள் அதிக அளவில் உள்ள நிலையில் நகரமயமாதலால் பாதிப்புகள் அதிகரிக்கும் எனவும் குற்றம் சாட்டினர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சமரசம் மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியது
Next Story







