விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
X
ஆண்டியப்பனூரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனுரில் தமிழக விவசாய சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் மாநில இளைஞர் அணி தலைவர் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் வேலுசாமி மற்றும் மாநில செயலாளர் பழனி முருகன் மற்றும் மாநில பொருளாளர் ராஜேஷ் பங்கேற்றனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் வேலுசாமி பேசுகையில் தமிழக விவசாயிகள் தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுற்கு தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. தமிழகம் பொறுத்தவரை இன்றைக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை மற்றும் பனை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர். தமிழகத்தில் கலப்படம் இல்லாத ஒரு உணவுப் பொருளாக தென்னை மற்றும் பனைமைரகள் உள்ளது. தமிழக விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கள்ளுவிர்க்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் கள்ளுவிற்கு உண்டான தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் எதற்காக இந்த தடை? உடனடியாக தமிழக அரசு முன்வந்து விவசாயிகளின் நலன் கருதி கள்ளுவிற்க்கு உண்டான தடையை நீக்க வேண்டும். இதை நீக்காவிட்டால் விவசாயிகள் தமிழகம் முழுவதும் அவரவர் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து தமிழக அரசின் தடையை மீறி கள் இறக்கி சந்தைப்படுத்துவோம்.தமிழக அரசு கைது செய்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். மேலும்,கரும்பு விவசாயிகளின் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.6 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.தவறும் பட்சத்தில் விவசாயிகள் பொங்கல் வைப்பதற்கு பதிலாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொங்கல் பானையை உடைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற உடனே பத்தாயிரம் கோடி மதிப்பில் தமிழகத்தில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தது.ஆனால் இதுனால் வரை நீர்வளத் துறை மூலமாக 150 தடுப்பணை கூட கட்டவில்லை. வட மாவட்டங்களான திதுப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பிரதான நீர் பாசன திட்டமாக பாலாறு அமைந்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் பாலாற்றின் குறுக்கே 2025-26 அறிக்கையில் குறைந்தது 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். ஆண்டியப்பனூர் அனை தூர்வாரி சீரமைத்தல் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கட்டாயம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளீட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மாநிலத் துணைத் தலைவர் ராஜ பெருமாள்மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்
Next Story