பேருந்தில் கைவரிசை காட்டிய இரண்டு பெண்கள் சிக்கினர்
Kanchipuram King 24x7 |2 Jan 2025 1:26 PM GMT
காஞ்சிபுரத்தில் பேருந்தில் கைவரிசை காட்டிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணம்மாள், 56. இவர், திருத்தணியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து தடம் எண்: டி27 என்ற அரசு பேருந்தில் பயணம் செய்தார்.தண்டலம் அருகே சென்றபோது, தன் கைப்பையில் வைத்திருந்த 4 சவரன் தங்க நகை காணவில்லை என தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த பொன்னேரிக்கரை போலீசார் ஆய்வு செய்தனர். அதே பேருந்தில் பயணியத்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பூமி, 25, சுமித்ரா, 35, ஆகிய இருவரும் தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது.இருவரையும் பொன்னரிக்கரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், காஞ்சிபுரம் பல்லவர்மேடைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி 46. இவர், நேற்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மாலை வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரிந்தது. சிவகாஞ்சி போலீசார் விசாரணையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 24, என்பவர் திருடியது தெரிய வந்தது. ரஞ்சித்குமாரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story