சுசீந்திரம் கோவிலில் மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி
Nagercoil King 24x7 |2 Jan 2025 3:15 PM GMT
குமரி
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில் மார்கழி பெருந்திருவிழாவுக்கான மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி, கோயில் வளாகத்தில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கோயில் மார்கழி பெருந்திருவிழா ( ஜன 4) ல் காலை 7.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பாரம்பரிய முறைப்படி திருக்கோயில் வழிவகை ஊா் தலைவா்களுக்கு மஞ்சள் வைத்து அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. வட்டப் பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத் பிடாகை காரர்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் துளசிதரன் நாயா், ராஜேஷ், சுந்தரி, நாகர்கோயில் தொகுதி சூப்பிரண்டு ஆனந்த், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவா் அனுஷியா, தி.மு.க பேரூர் செயலாளர் சுதை சுந்தர், 18 பிடாகை மற்றும் ஊர் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story