திருமங்கலம் இரயில்வே கேட் மூடல்

திருமங்கலம் இரயில்வே கேட் மூடல்
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக இரயில்வே கேட் மூடப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனை அடுத்துள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் திருமங்கலம் பகுதியில் தண்டவாள பகுதி மற்றும் ரயில்வேகேட் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. கடந்த 30ம் தேதி இந்த ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள் நடந்த நிலையில் இன்று (ஜன.3) மீண்டும் ரயில்வே ஸ்டேசனை அடுத்துள்ள கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட உள்ளது.இதனால் ரயில்வே கேட்டினை பகுதி மக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி கொள்ளும்படி, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Next Story