தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை

தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை
தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை
தென்காசி, செங்கோட்டை உப மின்நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) மின்விநியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப. திருமலைக்குமாரசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி, செங்கோட்டை உப மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகா், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
Next Story