முத்தூர் அருகே கிணற்றில் மிதந்த ஆண் பிணம்

முத்தூர் அருகே கிணற்றில் மிதந்த ஆண் பிணம்
முத்தூர் அருகே கிணற்றில் மிதந்த ஆண் பிணம் வெள்ளகோவில் காவல்துறை விசாரணை
முத்தூர் வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ந.கரையூர் கிராமத்தில் ஊர் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 25 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிணற்றில் நடந்தது இது பற்றி அறிந்ததும் வெள்ளக்கோவில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிணற்றில் மிதந்த ஆண் பிணத்தை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் அவர் யார் என்று தெரியவில்லை. அவர் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story