சொத்தை மீட்டு தர கோரி மூதாட்டி எஸ் பி அலுவலகத்தில் மனு

போலியான ஆவணம் தயாரித்து கிரையம் செய்து நில மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தர்மபுரி எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கடம்பர அள்ளி கிராமத்தை சேர்ந்த ராமக்காள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார் அவர் அளித்த மனுவில், தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் வட்டம் கடம்பர அள்ளி கிராமத்தில் வசித்து வருகிறார் இவருடைய கணவர் பெரிய தம்பி. ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார் இவர் 6/6/1988 ஆம் ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரிடம் சுமார் 40 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி தர்மபுரி சார்பதிவாளர் அலுவலகத்தில் சுத்த கிரையம் செய்து அதில் வீடு கட்டி 25 வருடமாக வாழ்ந்து வருகின்றனர்.பெரிய தம்பி இறந்து விட்டதால் அவர் மனைவியை ஏமாற்றும் நோக்கத்தோடு அந்த நிலத்தை விற்ற பொன்னுசாமி அவரே மீண்டும் 24/2/2014 ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் மற்றும் திருப்பதி ஆகியோர்களுக்கு போலியான ஆவணம் தயாரித்து மொரப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்து கொடுத்துள்ளார். கடந்த மாதம் வெங்கடேசன் அவர்கள் ராமக்காள் வசித்து வந்த வீட்டை இந்த இடம் எனக்கு தான் சொந்தம் இந்த இடத்தை நான் வாங்கி விட்டேன் என்று கூறி வீட்டை இடித்து விட்டு வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வயதான ராமக்காளை அங்கிருந்து முடிக்கிவிட்டார் இதனால் தங்கமிடமில்லாமல் பக்கத்தில் அமைந்துள்ள சர்ச்சில் தன் தஞ்சம் புகுந்துள்ளார். அதனால் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன் போலியான பத்திரம் மூலம் சொத்தை கிரையம் செய்து தன் நிலத்தை மோசடி செய்து அபகரித்துக் கொண்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தன் சொத்தை மீட்டு தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்
Next Story