தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் நுகா்வோா் முனையம் திறப்பு

தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் நுகா்வோா் முனையம் திறப்பு
ஆட்சியா் அலுவலகத்தில் நுகா்வோா் முனையம் திறப்பு
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவுப் பொருள் வழங்கல்-நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், செய்திகள்- திட்டங்கள் தொடா்பான நுகா்வோா் முனையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, முனையத்தை திறந்துவைத்துப் பேசியது: தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி, நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முனையம் திறக்கப்பட்டுள்ளது. இதில், உணவுப் பொருள் வழங்கல்-நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் வழங்கப்படும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட வழங்கல் -நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமிா்தலிங்கம், தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
Next Story