சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு பொதுமக்கள் அச்சம்

அரூர் அருகே சாலையில் ஊர்ந்து சென்ற 6 அடி நீள மலைப்பாம்பு, சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர்- தருமபுரி நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள கொளகம்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று ஜனவரி 2 இரவு 9 மணி அளவில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையின் ஒருபுறம் இருந்து மற்றொரு புறம் கடந்து சென்றது. இதனை அடுத்து சாலையில் சென்ற போது கவனித்த இருசக்கர வாகன ஓட்டிகள் உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்தினர். மலைப்பாம்புகளை டிவியில் மட்டுமே பார்த்திருந்த மக்கள் தற்போது நேரில் பார்த்தவுடன் பயத்தில் உறைந்து போயினர். மேலும் தற்போது அரூர் வட்டார சமூக வலைதளபக்கங்களில் தற்போது மலைப்பாம்பு சாலையை கடக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story