அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது
சென்னையில் நேற்று சௌமியா அன்புமணி கைது செய்ததை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பாக, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில், பாமக சார்பில் பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கடத்தூர் பேருந்து நிலையத்தில், பாமக மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் போராட்டத் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினரை கைது செய்தனர்.அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் அருகில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த போலீசார் அவர்களை கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர். அப்போது பேருந்தில் ஏறிய பாமகவினர் பேருந்தில் இருந்தபடியே கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story