அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி
அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியூர் புதுவலவு என்ற பகுதியில் கான் கிரீட தளம் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைக்க ரூ.21 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். இதில் அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் வத்தில் செந்தில்நாதன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பி.எஸ்.பழனிச்சாமி, பேரூர் தி.மு.க. துணைச் செயலாளர் கனகராஜ், பொருளாளர் ரமேஷ், ஒன்றிய பிரதிநிதி ஜெயச் சந்திரன் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த அவினாசி. சுந்தசாமி. சுரேஷ் முருகேசன் உள்பட தி.மு.க.வினர், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



