ராணிப்பேட்டை:பேருந்து பைக் மீது மோதி ஒருவர் பலி!

தனியார் கம்பெனி பேருந்து -பைக் மீது மோதி விபத்து- ஓட்டுனர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தாபுரத்தைச் சேர்ந்த இளங்கோ சென்னை மாநகர பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி சகுந்தலா மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்று ஒரே பைக்கில் 4 பேரும், காஞ்சிபுரம் சென்று விட்டு வீடு திரும்பினர். தக்கோலம் கூட்டுரோடு அருகில் வரும்போது, எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ்-பைக் மீது மோதியது. இதில், இளங்கோ உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். தக்கோலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story