கருங்கல் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
Nagercoil King 24x7 |3 Jan 2025 3:16 AM GMT
குமரி
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் கைதேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் பூஜை முடிந்தது கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். மறுபடியும் நேற்று காலை பக்தர்கள் வந்து பார்த்தபோது கோயிலின் முன்பக்கம் இருந்த காணிக்கை பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். உள்ளே பார்த்தபோது பெட்டியில் இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் பணத்தை முழுவதும் எடுத்து விட்டு காலிப் பெட்டியை கோவிலின் காம்பவுண்ட் சுவர் மீது சாய்த்து வைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் கருங்கல் போலீசில் நிலையத்தில் தகவல் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story