அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம் எல் ஏ ஆய்வு
Nagercoil King 24x7 |3 Jan 2025 3:32 AM GMT
தடிக்காரன் கோணம்
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தடிக்காரன்கோணம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் நேற்று திடீரென சென்று ஆய்வு செய்தார். நோயாளிகள் வருகை, உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், பிரசவங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், தற்போது 30 படுக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர் பணியிடங்களில் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருக்கிறார். பிற மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதைப்போன்று 5 செவிலியர் பணியிடங்களில் 3 பேர் மட்டுமே தற்போது பணியில் இருக்கிறார்கள். இதனால் மருத்துவ சிகிட்சைக்கு வருகின்ற இக்கிராம மக்களுக்கு முறையான சிகிட்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் இக்கிராமத்தில் இருந்து வருகின்ற நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் முறையான சிகிட்சைகள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Next Story